/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுவர்கள் ஓட்டும் வாகனங்களால் அச்சம்
/
சிறுவர்கள் ஓட்டும் வாகனங்களால் அச்சம்
ADDED : ஜூலை 23, 2024 05:16 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதியில் டூவீலர், கார்களை சிறுவர்கள் ஓட்டுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இப்பேரூராட்சியில் நான்கு ரோடு சந்திப்பு, கிருங்காகோட்டை ரோடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் 18 வார்டுகள் மற்றும் புறநகர் பகுதிகளில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஒரே டூவீலரில் 3 முதல் 4 பேர் வரை பயணிக்கும் நிலையில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவதை பல இடங்களில் காண முடிகிறது. போலீசாரை கண்டதும் அவர்கள் வாகனங்களை திருப்பிக் கொண்டு வேறு வழியில் சென்று விடுகின்றனர்.
சிறுவர்கள் வாகனாங்களை ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சில இடங்களில் சிறுவர்கள் கார்களையும் ஓட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே சிறுவர்களுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்களை அழைத்து எச்சரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.