ADDED : செப் 05, 2024 08:44 PM
காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகேவுள்ள கமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி மகன் நாகராஜ் 17.
மாற்றத்திறனாளியான இவர் பிளஸ் 2 தேர்வில் 435 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். மேலும் நீட் தேர்வில் 136 மதிப்பெண் எடுத்தார். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க வாய்ப்பு பெற்றார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி உடையப்பன் மகன் ரவி பீர்க்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். நீட் தேர்வில் 597 மதிப்பெண் பெற்றதுடன் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க வாய்ப்பு பெற்றார்.
இவர்களுக்கு முன்னாள் தலைமை செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., குழு நண்பர்கள் உதவ முன் வந்தனர். 2 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினர்.