நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள டீ கடை, வடை கடை, உணவகங்கள், காந்திவீதியில் உள்ள கடைகளில் நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரி சரவணகுமார் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் டீ கடை, வடை கடைகளில் பேப்பரில் வடை உள்ளிட்ட எண்ணெய் உணவு பொருட்களை மடித்து கொடுக்க கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பஸ் ஸ்டாண்டில் உள்ள 3 கடைகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்தார்.
ஒரு பானி பூரி கடையில் எந்தவித நிறுவனம் பெயரும், காலாவதி தேதியும் இல்லாத மிளகு பவுடர் 2 கிலோவும் 2 கடையில் 5 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பை பறிமுதல் செய்யப்பட்டு தலா ரூ.1000 அபராதம் விதித்தார்.