/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள் கீழடி 10ம் கட்ட அகழாய்வில் கண்டெடுப்பு

ADDED : ஜூலை 02, 2024 09:23 PM

கீழடி:கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு கடந்த மாதம் 18ம் தேதி துவங்கியது. தொல்லியல் துறை இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் 13 தொழிலாளர்கள் அகழாய்வு செய்து வருகின்றனர்.
இங்குள்ள ஜவஹர், கார்த்திக், பிரபாகரன் ஆகியோருக்கு சொந்தமான நிலங்களில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு மூன்றரை அடி ஆழத்தில் ஆய்வு நடக்கிறது.
இதுவரை பாசி மற்றும் கண்ணாடி மணிகள் 'தா' என்ற 'தமிழி' எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு பானை ஓடுகள் சமீபத்தில் கிடைத்தது.
ஒரு ஓட்டில் மீன் உருவம் கோட்டுச் சித்திரமாகவும், மற்றொரு ஓட்டில் செதில்கள், கழுத்து வளையம் உள்ளிட்டவையும் வரையப்பட்டுள்ளன.
ஆறாம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடும், ஏழாம் கட்டத்தில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட உறை கிணறும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சில குழிகளில் அகழாய்வு செய்தால் இன்னும் ஏராளமான ஆதாரங்கள் கிடைக்கும் என தொல்லியல் துறையினர் கூறினர்.