நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் மானாமதுரை கிளை சார்பில் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கல்வெட்டு திறப்பு மற்றும்கொடியேற்று விழா கிளை தலைவர் அசோக் தலைமையில் நடந்தது.
செயலாளர் செல்லமுத்து, பொருளாளர் கருப்புசாமி வரவேற்றனர்.மாநில செயலாளர் பிச்சை கொடியேற்றி வைத்தார். மாநில தலைவர் வைரவன் கல்வெட்டை திறந்து வைத்தார். மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார், பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி சிறப்புரை ஆற்றினர்.