நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழா 8 ம் திருநாளை முன்னிட்டு பெயின்டர்கள் நல சங்கத்தினர் நான்காவது ஆண்டாக பூத்தட்டு எடுத்தனர். நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பூத்தட்டுடன் திருத்தளிநாதர் கோயிலிலிருந்து புறப்பட்டு ஊர்வலமாக பூமாயி அம்மன் கோயிலுக்கு சென்றனர். பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தி வழிபட்டனர்.
அம்மன் சநத்னக்காப்பு வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.