/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் இன்று பூச்சொரிதல் விழா
/
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் இன்று பூச்சொரிதல் விழா
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் இன்று பூச்சொரிதல் விழா
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் இன்று பூச்சொரிதல் விழா
ADDED : ஜூலை 12, 2024 04:26 AM

சிவகங்கை: சிவகங்கையில் பிரசித்தி பெற்ற பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில், அம்மனுக்கு இன்று காலை முதல் இரவு வரை பெண்கள் பூத்தட்டுகளை ஏந்திவந்து, பூச்சொரிந்து வழிபாடு நடத்துகின்றனர்.
இக்கோயிலில் ஜூலை 5ம் தேதி காப்பு கட்டுதல்,கொடியேற்றத்துடன் பூச்சொரிதல் விழா தொடங்கியது. தினமும் காலை, மாலை அம்மனுக்குசிறப்பு அபிேஷக ஆராதனை செய்தனர். பக்தர்கள் எலுமிச்சை, நெய்விளக்கேற்றி நேர்த்தி செலுத்தினர்.
பொங்கல், மாவிளக்கு படைத்து வழிபட்டனர். தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. விழாவின் எட்டாம் நாளான இன்று அதிகாலை 5:30 மணிக்கு அம்மனுக்கு பால் அபிேஷகம், சகல திரவிய அபிேஷகம் நடைபெறும். அதனை தொடர்ந்து அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் குழந்தையுடன் காட்சி அளிப்பார். அதற்கு பின் நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள்பூத்தட்டுக்களை ஏந்தி ஊர்வலமாக வருவர்.
பிள்ளைவயல் காளியம்மன் கோயிலை வலம் வந்து, அம்மனுக்கு பூச்சொரிந்து வழிபாடு நடத்துவர். பூச்சொரிதல் நிகழ்வு இன்று இரவு வரை நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு சிவகங்கை நகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிேஷக, ஆராதனைகள்நடைபெறும். கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.
சிவகங்கை எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் டி.எஸ்.பி.,சிபிசாய் சவுந்தர்யன், போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். விழா ஏற்பாட்டை ஹிந்து அறநிலைய செயல் அலுவலர் நாராயணி, பூஜைகளை சங்கு மணிகண்டன் செய்து வருகின்றனர்.