நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை,- நாட்டரசன்கோட்டை அருகே உள்ள கண்டுபட்டி தெற்குவளவு பூர்வீக காளியம்மன் கோயிலில் ஆடி பெருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி விழா நடந்தது. ஜூலை 26ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
பக்தர்கள் அம்மனுக்கு பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.பெண்கள் நவதானியங்கள் கொண்டு வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்றனர். முளைப்பாரிகளை அம்மனுக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.