/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாவட்ட இசைப்பள்ளியில் நாட்டுப்புற கலைப்பயிற்சி
/
மாவட்ட இசைப்பள்ளியில் நாட்டுப்புற கலைப்பயிற்சி
ADDED : ஜூலை 02, 2024 10:04 PM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதி நேர நாட்டுப்புற கலைப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளது. ஒயிலாட்டம், கரகாட்டம், இசை நாடகம், தெம்மாங்கு பாடல் ஆகிய கலைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து பயிற்சி மேற்கொள்ளலாம்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை இக்கலை பயிற்சி நடைபெற உள்ளது. ஜூலை 12 ஆம் தேதி அன்று தொடங்க உள்ள இப்பயிற்சி வகுப்பில் 17 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்.
ஓராண்டு சான்றிதழ் பயிற்சிக்கு ரூ.500 கட்டணமாக பெறப்படும். ஆர்வமுள்ளவர்கள் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் என்பவரை 97863 41558 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.