/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உணவு பாதுகாப்புதுறை கமிஷனர் ஆலோசனை கூட்டம்
/
உணவு பாதுகாப்புதுறை கமிஷனர் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 20, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் லால்வேனா துறை வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
மாவட்டத்தில் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வளர்ச்சி பணிகள், பொதுமக்களுக்கு தேவைப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்தனர்.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.செல்வசுரபி முன்னிலை வகித்தார்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன், மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, கலெக்டர் பி.ஏ., (பொது) முத்துக்கழுவன், தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.