/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேர்தலில் நிற்க பல கோடி வேணும் முன்னாள் அமைச்சர் ஆதங்கம்
/
தேர்தலில் நிற்க பல கோடி வேணும் முன்னாள் அமைச்சர் ஆதங்கம்
தேர்தலில் நிற்க பல கோடி வேணும் முன்னாள் அமைச்சர் ஆதங்கம்
தேர்தலில் நிற்க பல கோடி வேணும் முன்னாள் அமைச்சர் ஆதங்கம்
ADDED : பிப் 15, 2025 02:12 AM
சிவகங்கை:''மக்களை நம்ப முடியவில்லை. பல கோடிகள் வைத்திருப்பவர்கள் தான் எம்.எல்.ஏ., தேர்தலில் நிற்க முடியும் '' என சிவகங்கையில் அ.தி.மு.க., ஜெ., பேரவை ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
அவர் பேசியதாவது:
தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு ஆண்டு தான் உள்ளது. மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தி.மு.க.,வினர் பணத்தால் ஜெயித்து விடுவோம் என நம்புகின்றனர். மக்களை நம்ப முடியவில்லை. கிராமங்களில் ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு சொந்த பந்தங்கள் பார்த்து ஓட்டளித்தனர். இப்போது அந்த நிலை இல்லை.
பணம் கொடுப்பவர்கள் தான் வெற்றியடைகின்றனர். பல கோடிகள் வைத்திருப்பவர்கள் தான் எம்.எல்.ஏ., தேர்தலில் நிற்க முடியும். நமது கட்சியில் இரண்டு பேர் சும்மா இருக்க முடியாமல் பேட்டியை கொடுத்து விட்டனர். அதை ஊடகங்கள் பெரிது படுத்துகிறது. அ.தி.மு.க.,வை களங்கப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் வேலையாக உள்ளது.
கூட்டணி இன்றி வெற்றி பெற முடியாது என நம் கட்சியினரே நினைக்கிறார்கள். தி.மு.க.,வை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் நம்முடன் கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் என பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாம் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். கட்சியினர் அனைவரும் உழைத்து 2026 சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்றார்.

