ADDED : ஏப் 08, 2024 05:46 AM
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை., சுகாதார மையத்தில் அழகப்பரின் 115வது பிறந்த தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடந்தது.
அழகப்பா பல்கலை., சுகாதார மையம் யோகா கல்வி மையம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படைமற்றும் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் அப்போலோ ரீச் மருத்துவமனை சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமை துணைவேந்தர் க. ரவி தொடங்கி வைத்தார். அழகப்பா பல்கலை., ஆட்சிக் குழு உறுப்பினர் குணசேகரன் பேசினார்.
அழகப்பா பல்கலை., பதிவாளர் செந்தில்ராஜன் வாழ்த்தினார். அப்பல்லோ ரீச் மருத்துவமனை டாக்டர்கள் செல்வராஜ், ஹரிணி, சக்கரவர்த்தி, உதயா ஆலோசனைகளை வழங்கினர்.
இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் விநாயகமூர்த்தி என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் பேராசிரியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். டாக்டர். ஆனந்தி வரவேற்றார். பேராசிரியர் சரோஜா நன்றி கூறினார்.