தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தாட்கோ மூலம் இலவச பயிற்சி  

தாட்கோ மூலம் இலவச பயிற்சி  

தாட்கோ மூலம் இலவச பயிற்சி  


ADDED : ஜூன் 03, 2026 08:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 08:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை, ஜூன் 4-ஆதிதிராவிட, பழங்குடியினர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞர்கள் பயன்பெறும் விதத்தில் தாட்கோ (ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம்) மூலம் பல்வேறு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள்  www.tahdco.com  என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் மூலம் இப்பிரிவு இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர் (கேட்) டிசைன், (கேம்) உற்பத்தி, இண்டஸ்ட்டிரியல் ஆடோமேஷன் ஆகிய பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள் பயன்பெறலாம். இப்பயிற்சியில் பி.இ., மெக்கானிக், இன்ஜினியரிங், மின் மற்றும் மின்னணுவியல் இன்ஜி., பொறியியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 35 க்குள் இருத்தல் அவசியம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். பயிற்சியானது 90 நாட்களாக பெரம்பலுார், சேலம் மாவட்டங்களில் நடைபெறும். இதற்கான செலவுகளை தாட்கோ நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும். ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வழங்கப்படும். இப்பயிற்சியை பெற விரும்புவோர் இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார்.////

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us