/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் அடிக்கடி மின்தடை
/
திருப்புவனத்தில் அடிக்கடி மின்தடை
ADDED : மே 10, 2024 11:10 PM
திருப்புவனம்: திருப்புவனத்தில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருப்புவனத்தில் நெல்முடிகரை துணை மின் நிலையத்தில் இருந்து நகர் பகுதிக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
திருப்புவனத்தில் மட்டும் 40 ஆயிரம் இணைப்புகள் உள்ளன. பெரும்பாலான வீடுகளில் டிவி., எல்.இ.டி. டி.வி., பிரிட்ஜ், ஏ.சி., மிக்ஸி, கிரைண்டர், குடிநீர் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கோடைவெயில் காரணமாக ஏசி மற்றும் மின்விசிறியின் தேவை அதிகரித்துள்ளது. திருப்புவனத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
பத்து நிமிடத்திற்கு ஒரு முறை மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மின்சாதன பொருட்கள் சேதமடைந்து வருகின்றன.
தற்போது புழக்கத்தில் உள்ள எல்.இ.டி., டி.வி.,க்கள் அனைத்து நவீனமானவை, டி.வி.,க்கள் பழுது பார்க்கவே முடியாது. பழுதானால் புதிய டி.வி., தான் வாங்க வேண்டும், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் இவை பழுதாகின்றன. குடும்பத்தில் கணவன்/மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால் காலையில் தண்ணீர் பிடிக்க மோட்டார் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
வேலைக்கு செல்லும் நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் போது பலரும் அவசரமாக கிளம்புவதால் மின் விசிறி, மின் விளக்குகளுக்கான இணைப்புகளை துண்டிக்க மறந்து செல்கின்றனர்.
மீண்டும் மின்சாரம் வந்து ஆளில்லாத வீடுகளில் தேவையின்றி எரிந்து மின்சாரம் விரயமாகிறது.
மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கான எந்த காரணமும் மின்வாரிய ஊழியர்கள் தெரிவிப்பது இல்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.