ADDED : மார் 01, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை தாலுகாவில் சிவராத்திரியை முன்னிட்டு பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் பாவனக்கோட்டை பரம்பக்குடி அருகே நேற்று முன்தினம் இரவு பெண் எஸ். ஐ., செல்வி , போலீஸ் சதீஷ் குமார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
தேவகோட்டை சருகணி நெடுஞ்சாலையில் வந்த ஒரு டூவீலரை நிறுத்தி சோதனையிட்டபோது அந்த வாகனத்தில் 2 அடி நீளமுள்ள பட்டாக்கத்தி வாள் இருந்தது.
விசாரணையில் தேவகோட்டை அருகே இறகுசேரி பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் முத்துக்குமார் என தெரியவந்தது. இவர் இரு வருடங்களுக்கு முன் தேவகோட்டை நகரில் நடந்த இரு கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டவர் என்றும், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சரித்திர பதிவேட்டில் உள்ளவர் என தெரியவந்தது. முத்துக்குமாரை ஆயுத தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தனர்.