/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சார்பதிவாளர் அலுவலகம் அருகே குப்பை: ஊழியர்கள் பாதிப்பு
/
சார்பதிவாளர் அலுவலகம் அருகே குப்பை: ஊழியர்கள் பாதிப்பு
சார்பதிவாளர் அலுவலகம் அருகே குப்பை: ஊழியர்கள் பாதிப்பு
சார்பதிவாளர் அலுவலகம் அருகே குப்பை: ஊழியர்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 31, 2024 06:16 AM

சிங்கம்புணரி, : சிங்கம்புணரியில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே கொட்டப்படும் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்துக் கொண்டேபத்திரப்பதிவு செய்யவேண்டிய அவலம் உள்ளது.
இப்பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் பாலாறு செல்லும் ரோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலகம் அருகே ரோட்டில் சிலர் தினமும் குப்பைகளையும், இறைச்சிக் கழிவுகளையும் கொட்டுகின்றனர். நாய், பூனை போன்றவைஇறந்தால் அவற்றை புதைக்காமல் இங்கு வந்து போட்டு விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
மழைக்காலங்களில் சார்பதிவாளர் அலுவலகம் வரை துர்நாற்றம் வீசுவதால் அங்கு வரும் பொதுமக்கள் மட்டுமல்லாது அலுவலர்களும் மூக்கை பிடித்துக் கொண்டே வந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே இச்சாலையில் குப்பை, கழிவு கொட்டுவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.