/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராமங்கள் வழியாக காஸ் குழாய் அவசர கால ஒத்திகை
/
கிராமங்கள் வழியாக காஸ் குழாய் அவசர கால ஒத்திகை
ADDED : மார் 12, 2025 12:56 AM
திருப்புவனம்; திருப்புவனம் அருகே காஸ் குழாய்களில் கசிவு நிகழ்ந்து தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாப்பது எப்படி என அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தாரால் செல்லப்பனேந்தல் கிராமத்தில் நடத்தப்பட்டது.
சென்னை எண்ணுார் துறைமுகத்தில் இருந்து துாத்துக்குடி வரை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பாக காஸ் குழாய் அமைக்கப்பட்டு விநியோகம் நடந்து வருகிறது. திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தல் அச்சங்குளம் வழியாக இந்த குழாய் செல்கிறது. எரிவாயு குழாய் மற்றும் எரிவாயு சிலிண்டர்களில் கசிவு நிகழ்ந்து தீ விபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் செல்லப்பனேந்தல் கிராமத்தில் அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் தாசில்தார் விஜயகுமார், தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர். முகாமில் மதுரை மண்டல செயல் மேலாளர் மணிலா எரிவாயு குழாய்கள் பற்றியும் தீ விபத்து தடுப்பது குறித்தும் தெரிவித்தார்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன மதுரை மண்டல மேலாளர் சுந்தர் பேசுகையில்:
எரிவாயு குழாய் மட்டுமல்லாது வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள், மின் கசிவு காரணமாக ஏற்படும் விபத்துகளை தவிர்க்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்கமளித்தார். வீடுகள்தோறும் தீயணைப்பான் கருவி வைத்திருந்து அதனை பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும், எரிவாயு பயன்பாடு காரணமாக சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படுகிறது. எரிவாயு குழாய் மூலம் அனுப்பும் போது நேரம், இழப்பு உள்ளிட்டவை தவிர்க்கப்படும், என்றார்.