/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சேவுகன் அண்ணாமலை கல்லுாரி மாணவருக்கு பரிசு
/
சேவுகன் அண்ணாமலை கல்லுாரி மாணவருக்கு பரிசு
ADDED : ஜூலை 01, 2024 06:14 AM

தேவகோட்டை : தேவகோட்டையில் ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, திருவேகம்பத்துார் ஆரம்ப சுகாதார நிலையம், ஆல் தி சில்ரன் அமைப்பினர் இணைந்து மாரத்தான் போட்டி நடத்தினர்.
சேவுகன் அண்ணாமலை கல்லுாரி, ஆனந்தா கல்லுாரியைச் சேர்ந்த மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் குமார் வரவேற்றார். தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை தலைமையில் டி.எஸ்.பி., பார்த்திபன் துவக்கி வைத்தார். ஆனந்தா கல்லுாரி முதல்வர் ஜான் வசந்த் குமார், தமிழ்நாடு ஆல் தி சில்ரன் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரபிரபு பங்கேற்றனர்.
போட்டியில் மாணவர் பிரிவில் சேவுகன் அண்ணாமலை கல்லுாரி ராமச்சந்திரன் முதலிடம் பெற்று கோப்பையை வென்றார். முத்துராமலிங்கம் இரண்டாம் இடமும், ரூபன் மூன்றாமிடம், மாணவியர் பிரிவில் நந்தினி முதலிடமும் வென்றனர். உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் சுகாதார நிலைய ஆலோசகர் முருகன் பங்கேற்றனர்.