ADDED : ஜூலை 24, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கையில் கோட்டப்பத்து அகமுடையர் அறக்கட்டளை மகா சபை கூட்டம் நடந்தது. தலைவர் சக்திமோகன் தலைமை வகித்தார்.
செயலாளர் வீரையா முன்னிலை வகித்தார். பொருளாளர் பாண்டி வரவேற்றார். நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை, கேடயம் வழங்கினர்.