நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை, : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொன்விழா துவக்கத்தை முன்னிட்டு மானாமதுரையில் கவிதை வாசித்தல்,முன்னோடிகளின் படத்திறப்பு விழா நடந்தது.கிளைத் தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மறைந்த முன்னோடிகள் சுந்தரம்,சுப்பிரமணியன்,செல்லகதிரவன்
ஆகியோர் படங்களை கவிஞர். சோமசுந்தரபாரதி திறந்து வைத்தார்.மாவட்ட பொருளாளர் பாலமுருகன்,செயலாளர் ரசீந்திரகுமார் மற்றும் ராஜாராமன்,முத்துராமலிங்கம், ஜீவா உள்ளிட்ட நிர்வாகிகள்,உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.