ADDED : செப் 16, 2024 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை, : மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் எதிரே அரசு பஸ், சரக்கு வேன் மோதியதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து பொன்னமராவதிக்கு செல்லும் அரசு பஸ், பஸ்ஸ்டாண்டிலிருந்து வெளியே நான்கு வழிச்சாலையை நோக்கி மதுரைக்கு சென்றது.
அப்போது பரமக்குடியிலிருந்து பிராய்லர் கோழி ஏற்றி சென்ற சரக்கு வாகனம் அரசு பஸ் மீது மோதியதில், இரு வண்டிகளுக்கும் சேதமானது. சரக்கு வாகன டிரைவர் காயமுற்றார்.
சரக்கு வாகனம் 4 வழிச்சாலையில் நடுரோட்டிலேயே நின்றதால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மானாமதுரை போலீசார் சரக்கு வாகனத்தை அப்புறப்படுத்தினர்.
இதனால் மதுரை -- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.