/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 30, 2024 03:31 AM

சிவகங்கை,: அரசு ஊழியர்களின் வருமான வரி பிடித்தம் செய்வதற்கான களஞ்சியம் என்ற புதிய செயலி பயன்பாட்டை கண்டித்து சிவகங்கை மாவட்ட கருவூலக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் செந்தில் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் செல்வக்குமார், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் குமார், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் சங்க மாவட்ட நிர்வாகி சுப்பிரமணியன், மக்கள் நல பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் பங்கேற்றனர். மாவட்ட துணை தலைவர் பிச்சை நன்றி கூறினார்.