நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி, : காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூன்றாவதுபட்டமளிப்பு விழா மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது.
முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்து கொண்டார். அழகப்பா பல்கலை துணை வேந்தர் க. ரவி, முன்னாள் துணைவேந்தர் எஸ். சுப்பையா, தேவகோட்டை ஆனந்தா கல்லுாரி முதல்வர் ஜான் வசந்தகுமார், சாரதா நிகேதன் கல்லுாரி செயலாளர் யதீஸ்வரி சாரதீஸ்வரி பிரியா அம்பா, லைப் கேர் பைட்டோ லேப்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை கல்லுாரி தலைவர் சேது குமணன் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு பட்டம், விருது வழங்கப்பட்டது. துணை முதல்வர் விஷ்ணு பிரியா நன்றி கூறினார்.