ADDED : மார் 06, 2025 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா, தோற்றியோர் தினம் மற்றும் கல்லூரி நாள் விழா நடந்தது.
செயலர் நா.ஆறுமுகராஜன் தலைமை வகித்தார். ஆட்சிக்குழு துணைத்தலைவர் நா.ராமேஸ்வரன் முன்னிலை வகித்தார். முதல்வர் கரு.ஜெயக்குமார் பட்டமளிப்பு அறிக்கை வாசித்தார். அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சொ.சுப்பையா 513 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.
கல்லுாரியின் 60வது தோற்றியோர் தினம்,கல்லூரி நாள் விழாவிற்கு செயலர் நா.ஆறுமுகராஜன் முன்னிலை வகித்தார். ஆட்சிக்குழுத் துணைத் தலைவர் நா.ராமேஸ்வரன் தலைமை வகித்தார். முதல்வர் ஜெயக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். அழகப்பா பல்கலை தேர்வாணையர் மு.ஜோதிபாசு பங்கேற்றார். துணை முதல்வர் மெ.அழகப்பன் நன்றி கூறினார்.