ADDED : ஜூன் 01, 2024 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி அருகே குணப்பனேந்தலில் உள்ள புனித மிக்கேல் அதிதுாதர் ஆலயத்தில் புனித வணக்கமாதா பெருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான அன்னதானம் கடந்த 28ம் தேதியும்,29ம் தேதி திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை 4:00 மணிக்கு நடைபெற்ற தேர்பவனியில் குணப்பனேந்தல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.