
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் குருபூஜை விழா நடந்தது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் உள்ளிட்டோர் பாடல் பாடிய ஸ்தலம் புஷ்பவனேஷ்வரர் ஆலயம்ஆகும்.
இங்கு நால்வர் சன்னதியில் சுந்தரருக்கு குருபூஜை விழா வேலப்பர் தேசிகர் திருக்கூட்டத்தினர் சார்பில் நடந்தது.
மதியம் 12 :00 மணிக்கு அபிஷேகம், ஆராதனையுடன் விழா தொடங்கியது.மாலை 5:45 மணிக்கு உற்சவர் திரு வீதி உலாவும்,ஆறரை மணிக்கு சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாறு குறித்து மதுரை முத்துராமலிங்கம் பக்திசொற்பொழிவாற்றினார்.
திருப்பூவண புராணத்தின் வரலாறு குறித்த நுாலை ஹைதராபாத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் வெளியிட்டார். அன்னதானம் வழங்கப்பட்டது.