/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பட்டமங்கலத்தில் இன்று குருப்பெயர்ச்சி ஹோமம்
/
பட்டமங்கலத்தில் இன்று குருப்பெயர்ச்சி ஹோமம்
ADDED : ஏப் 27, 2024 04:22 AM
திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில்இன்று குருப்பெயர்ச்சி சிறப்பு ஹோமம் நடக்கிறது.
இந்தாண்டு குருப்பெயர்ச்சியில் சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்கு குடி போகிறார். மே 1ல் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாவார்.
அதை முன்னிட்டு குருத்தலமான பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று குருப்பெயர்ச்சி சிறப்பு ேஹாமம் நடைபெறுகிறது.
இன்று காலை 9:00 மணிக்கு ேஹாமம் துவங்குகிறது. மதியம் 12:00 மணிக்கு பூர்ணா குதி தீபாராதனை நடைபெறும்.
மூலவருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறும். குருப் பெயர்ச்சியன்று மூலவர் மற்றும் கோபுரங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடை பெறும்.
ஏற்பாட்டினை கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.

