/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பா.ஜ., கூட்டணி 412 தொகுதியை பெறும் சிவகங்கையில் எச்.ராஜா பேச்சு
/
பா.ஜ., கூட்டணி 412 தொகுதியை பெறும் சிவகங்கையில் எச்.ராஜா பேச்சு
பா.ஜ., கூட்டணி 412 தொகுதியை பெறும் சிவகங்கையில் எச்.ராஜா பேச்சு
பா.ஜ., கூட்டணி 412 தொகுதியை பெறும் சிவகங்கையில் எச்.ராஜா பேச்சு
ADDED : ஏப் 18, 2024 06:24 AM
சிவகங்கை: இந்தியாவில் பா.ஜ., கூட்டணி 412 தொகுதிகளை கைப்பற்றும் என சிவகங்கையில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார்.
சிவகங்கையில் பா.ஜ., வேட்பாளர் தேவநாதன் பிரசாரத்தை நிறைவு செய்தார். பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதாவது:
தேர்தல் கருத்து கணிப்பு படி பா.ஜ., கூட்டணி 412 தொகுதியில் வெற்றி பெறும். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வருவார். அவரது ஆட்சியில் 2027 ல் நாடு உலக பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு வரும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவை காப்போம் என்கிறார். முதலில் தமிழக அளவில் நஷ்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தை மீட்க வேண்டும். அரசு பஸ் பணிமனைகள் 300 க்கும் மேற்பட்டவை முடங்கியுள்ளன.