ADDED : ஏப் 28, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை, :   மானாமதுரை அருகே உள்ள அன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த சாமத்துரை மகன் முத்துராமன் 55, இவரது வீட்டிற்கு அருகில்  வைக்கோல் வைத்திருந்தார்.
நேற்று மதியம் 2:00 மணிக்கு  வைக்கோல் படப்பில் தீப்பிடித்தது. மானாமதுரை தீயணைப்பு  நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள்  தீயை அணைத்தனர்.
முன்னதாக கிணற்றுக்குள் விழுந்த பசு மாடு, மானாமதுரை ரயில்வே காலனி பகுதியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு, விளத்தூர் கிராமத்தில் கிணற்றுக்குள் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்டனர்.

