ADDED : ஆக 03, 2026 07:11 PM
எஸ்.புதூர், ஆக. 4-–
எஸ்.புதூர் ஒன்றியத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணிகளால் மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இவ்வொன்றியத்தில் தர்மப்பட்டியில் இருந்து செட்டிகுறிச்சி வரையிலான 4 கி.மீ., தூர சாலையை சீரமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு மார்ச் மாதம் பணிகள் துவங்கியது. தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பணிகள் கிடப்பில் போடப்பட்டு ஒரு சில இடங்களில் மட்டும் துண்டு துண்டாக வேலை முடிக்கப்பட்டது. இதனால் இடையபட்டி, தர்மபட்டி, கோணம்பட்டி, அண்ணாவிபட்டி, செந்தலையன்களம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து புழுதிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வரும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இம்மாணவர்கள் சைக்கிளில் வரும் போது டயர் பஞ்சர் ஆவதால் சிரமப்படுகின்றனர். இதேபோல் அம்மன்செட்டிகுறிச்சியில் இருந்து வெள்ளிமலை அடிவாரத்திற்கு செல்லும் 100 மீட்டர் தூர சாலையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இக்கோயிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். ஒன்றியத்தில் வேறு சில பணிகளும் இதே போல் பாதியில் நிற்கிறது. எனவே அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
