/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வீடு தோறும் கொடியேற்றுதல் விழிப்புணர்வு ஊர்வலம்
/
வீடு தோறும் கொடியேற்றுதல் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 15, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடு, அலுவலகங்கள் தோறும் தேசிய கொடியை ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சிவகங்கையில் நடந்தது.
சிவகங்கை தலைமை தபால் நிலையம் முன் ஊர்வலத்தை நல்லாசிரியர் பகிரத நாச்சியப்பன் துவக்கி வைத்தார். தபால் கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் வரவேற்றார்.
உதவி கோட்ட கண்காணிப்பாளர் எம்.சித்ரா, தலைமை தபால் அலுவலர் வீரபாண்டியன் உட்பட பள்ளி மாணவர்கள், தபால் துறை அலுவலர், ஊழியர்கள் பங்கேற்றனர். சிவகங்கை, மானாமதுரை தலைமை தபால் நிலையத்தில் புகைப்பட கண்காட்சி நடந்தது. உபகோட்ட ஆய்வாளர் போற்றி ராஜா நன்றி கூறினார்.