/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாட்டை காக்க நல்ல வாய்ப்பு வீரர்களுக்கு ஐ.ஜி., அறிவுரை
/
நாட்டை காக்க நல்ல வாய்ப்பு வீரர்களுக்கு ஐ.ஜி., அறிவுரை
நாட்டை காக்க நல்ல வாய்ப்பு வீரர்களுக்கு ஐ.ஜி., அறிவுரை
நாட்டை காக்க நல்ல வாய்ப்பு வீரர்களுக்கு ஐ.ஜி., அறிவுரை
ADDED : ஆக 31, 2024 01:44 AM

சிவகங்கை:'நாட்டை காக்க நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது' என பயிற்சி முடித்த வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி. அறிவுரை கூறினார்.
சிவகங்கை மாவட்டம், இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை போலீஸ் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் 44 வார பயிற்சி முடித்த 1084 பேர்களுக்கு வழியனுப்பு விழா நடந்தது.
விழாவிற்கு ஐ.ஜி., நிர்பய்சிங் தலைமை வகித்தார். டி.ஐ.ஜி., ஆச்சல் சர்மா முன்னிலை வகித்தார். சிவகங்கை எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்க்ரே சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கமாண்டன்ட் சுனில்குமார் நன்றி கூறினார். பயிற்சி முடித்து சென்ற வீரர்களின் அணிவகுப்பு நடந்தது.
பயிற்சியின் போது சாதனை புரிந்த 6 வீரர்களுக்கு சுழற்கோப்பையையும், பயிற்சி படை வீரர்கள் 250 பேர்களுக்கு இலவசமாக சிலம்பம், கராத்தே பயிற்சி அளித்த சிவகங்கை சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் பரமசிவத்திற்கு பரிசு கோப்பையையும் ஐ.ஜி., வழங்கினார்.
இங்கு பயிற்சி முடித்த 1084 பேரில், தமிழ்நாட்டிற்குள் நியமிக்கப்பட்ட 79 வீரர்கள் மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம் மூலம் (ரோஜ்கர் மேளா) இப்பயிற்சி படையில் சேர்த்துள்ளனர்.
விழாவில் நிர்பய்சிங் பேசியதாவது:
இங்கு பயிற்சி பெற்றவர்கள் நாட்டிற்காக சேவை செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதை உணர்ந்து நாட்டை காக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
நாட்டின் நன்மைக்கு சரியான முறையில் வீரர்கள் கடமை ஆற்ற வேண்டும், என்றார்.