/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் இளவட்ட மஞ்சுவிரட்டு
/
சிங்கம்புணரியில் இளவட்ட மஞ்சுவிரட்டு
ADDED : மே 30, 2024 03:29 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் நடந்த இளவட்ட மஞ்சுவிரட்டில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
சிங்கம்புணரியில் ஆண்டுதோறும் கிராமத்தார்கள் சார்பில் மாட்டுப் பொங்கல், பங்குனி வழிபாட்டையொட்டி மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான இளவட்ட மஞ்சுவிரட்டு வைகாசி விசாக வழிபாட்டையொட்டி நேற்று நடந்தது. சீரணி அரங்கம் முன் பாரம்பரிய முறைப்படி தேர்வடத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் கட்டி வைக்கப்பட்டன. சந்திவீரன் கூடத்தில் இருந்து நாட்டார்கள் துணி எடுத்து வந்து மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தனர்.
முதலில் சேவுகமூர்த்தி கோயில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. அனைத்து காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா கமிட்டி சார்பில் வேட்டி வழங்கி கவுரவிக்கப்பட்டது. இம்மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர்.