/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறு, குறு விவசாயிகளுக்கு செல்லாத விதைகள்; வாங்க முடியாமல் திணறும் விவசாயிகள்
/
சிறு, குறு விவசாயிகளுக்கு செல்லாத விதைகள்; வாங்க முடியாமல் திணறும் விவசாயிகள்
சிறு, குறு விவசாயிகளுக்கு செல்லாத விதைகள்; வாங்க முடியாமல் திணறும் விவசாயிகள்
சிறு, குறு விவசாயிகளுக்கு செல்லாத விதைகள்; வாங்க முடியாமல் திணறும் விவசாயிகள்
ADDED : மே 31, 2024 06:20 AM
காரைக்குடி : சாக்கோட்டை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படும் விதைகள் முறையாக கிடைக்காததால் விவசாயிகள் அதிக விலை கொடுத்து விதைகளை வாங்கி வருகின்றனர்.
சாக்கோட்டை ஒன்றியத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இவ்வட்டாரத்தில் 4 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இப்பகுதியில், உள்ள பெத்தாச்சிகுடியிருப்பு, பெரிய கோட்டை, அரியக்குடி, இலுப்பக்குடி உட்பட பல்வேறு பகுதியிலும் கத்தரி, வெண்டை, சோளம், மிளகாய், தக்காளி உள்ளிட்ட பயிர்கள் 20 ஏக்கருக்கும் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.
விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சார்பில் வெண்டை விதை மற்றும் கத்தரி மிளகாய் தக்காளி நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் தங்களது நில ஆவணம் போட்டோ, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து இலவசமாக பெற்று வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு விதை மற்றும் நாற்றுகள் முறையாக வழங்கப்படவில்லை என புகார் எழுந்து வருகிறது. உழவு உரம் என ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்யும் நிலையில், விதைகளையும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், வேளாண் துறை சார்பில் சிறு குறு விவசாயிகளுக்கு நெல், கத்தரி, வெண்டை எள், நிலக்கடலை உள்ளிட்ட விதைகள் வழங்கப்பட்டது கடந்த பல வருடங்களாக விவசாயிகளுக்கு முறையாக விதை வழங்கப்படுவதில்லை.
பெரு விவசாயிகளுக்குமட்டுமே வழங்கப்படுகிறது. சிறு குறு விவசாயிகளையும் காப்பதற்கு வேளாண் துறை முன்வர வேண்டும். விதைகள் மட்டுமின்றி அரசு வழங்கும் பல சலுகைகள் சிறு விவசாயிகளை சென்றடைவதில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக வெண்டை விதை மற்றும் கத்தரி மிளகாய் தக்காளி நாற்றுகள் வழங்கப்பட்டு வந்தது. அரை ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டாலும் வீடுகளில் உள்ள தோட்டங்களுக்கு தேவைப்பட்டாலும் வழங்கி வருகிறோம்.
தற்போது, மா, நெல்லி உள்ளிட்ட மர வகைகள் அதிகளவில் வழங்கப்பட்டு வருவதால் விதை மற்றும் மிளகாய், தக்காளி நாற்று வரத்து குறைந்துள்ளது.