ADDED : ஜூன் 14, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்ற தொடக்க விழா உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் புதிய மாணவர்கள் சேர்க்கை விழா நடந்தது. தலைமை ஆசிரியர் தெய்வானை தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார்.
பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டனர்.
ஆசிரியர்கள் ராஜாபாண்டி, அமலதீபா கலந்துகொண்டனர். ஆசிரியர் கமலாபாய் நன்றி கூறினார்.