/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குழந்தைகள் பாலியல் வழக்கு அதிகரிப்பு
/
குழந்தைகள் பாலியல் வழக்கு அதிகரிப்பு
ADDED : ஜூலை 02, 2024 10:05 PM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது குறித்து 2015ம் ஆண்டு முதல் அதிகமான புகார் வருகிறது. 2015ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 28 வழக்கு, 2016ல் 29, 2017ல் 27,2018ல் 27, 2019ல் 25, 2020ல் 62, 2021ல் 89, 2022ல் 80, 2023ல் 75வழக்குகள் செய்யப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டு முதல் தற்போது வரை 500க்கும் மேற்பட்ட வழக்குகள் போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதில் 104 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 40 வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன.
தற்போது பாலியல் தாக்குதல் சற்று கூடுதலாக இருந்தாலும் புகார் தெரிவிப்பது மிகக்குறைவான எண்ணிக்கையில் தான் நடக்கிறது. போக்சோ பிரிவில் பதிவு செய்யப்படும் வழக்கில் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி வருகிறது.
எனினும் இந்த தாக்குதல் தொடர்கிறது. பாலியல் குற்றங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் பள்ளி கல்லுாரிகளில் பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.