சிவகங்கை : தேவகோட்டை ஜமீன்தார் தெரு உயர்நிலைப்பள்ளியில் அலமேலு கொடியேற்றினார். வீரப்பன், தலைமை ஆசிரியர் வெங்கடேசன் பங்கேற்றனர்.
* தேவகோட்டை யாதவ நர்சரி தொடக்கப்பள்ளியில் அழகப்பா பல்கலை துணை பதிவாளர் பாலசுப்பிரமணியம் கொடியேற்றினார். சங்க அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன் பங்கேற்றார்.
* சேவுகன் அண்ணாமலை மெட்ரிக் பள்ளியில், கல்லுாரி பேராசிரியை நாகபர்வதம் கொடியேற்றினார். தலைவர் லட்சுமணன், முதல்வர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளியில் அழகப்பா பல்கலை கழக மகளிர் துறை இயக்குநர் மணிமேகலை கொடியேற்றினார்.
திருப்புவனம்
* கீழடி அருங்காட்சியகத்தில் தொல்லியல் துறை இயக்குனர் (கீழடி பிரிவு) ரமேஷ் கொடியை ஏற்றினார். இணை இயக்குனர் அஜய், அருங்காட்சியக ஊழியர்கள் பங்கேற்றனர்.
* திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் விஜயகுமார் கொடியை ஏற்றினார். துணை தாசில்தார் சுமதி, வி.ஏ.ஓ., ஜெயகுமார் பங்கேற்றனர்.
* திருப்புவனம் புதூர் ஊராட்சி ஒன்றிய தெற்கு பள்ளியில் எம்.எல்.ஏ., தமிழரசி கொடியேற்றினார்.
பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், தலைமையாசிரியை அமுதா, ஆசிரியர் தெய்வேந்திரன், கவுன்சிலர் பத்மாவதி பங்கேற்றனர்.
*திருப்புவனம் கிட்ஸ் கிங்டம் பள்ளியில் முதல்வர் கற்பக புவனேஸ்வரி கொடியேற்றினார். தாளாளர் சுந்தர் பங்கேற்றார்.
* திருப்புவனம் அல்லிநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சத்யேந்திரன் கொடியேற்றினார். ஊராட்சி தலைவர் இந்திராகாந்தி பங்கேற்றார்.
* திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் கொடியேற்றினார். எஸ்.ஐ.,க்கள் ஜெயகண்ணன், சிவப்பிரகாசம் பங்கேற்றனர்.
* திருப்புவனம் பேரூராட்சியில் சேர்மன் சேங்கைமாறன் தேசிய கொடியை ஏற்றினார். முதுநிலை எழுத்தர் நாகராஜ், மேஸ்திரி ராஜேந்திரன், கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
*திருப்புவனம் வர்த்தகர்கள் சங்க கட்டடத்தில் தலைவர் சாதிக்பாட்ஷா தேசிய கொடியை ஏற்றினார். வர்த்தகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
*திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் சின்னையா தேசிய கொடியை ஏற்றினார். துணை தலைவர் மூர்த்தி, பி.டி.ஓ., க்கள் பாலசுப்ரமணியன், அருள்பிரகாசம், கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
*திருப்புவனம் வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ஜாஸ்மின் சாந்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
மாணவ, மாணவியர்களின் சுதந்திர தின கண்கவர் அணிவகுப்பும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
*திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியை கிறிஸ்டி செலினாள் பாய் தேசிய கொடியை ஏற்றினார்.
*திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியை கற்பகவள்ளி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். உதவி தலைமையாசிரியர் வீரப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
* திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஜெயக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
* மணலுார் அழகுமலர் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் யோகலெட்சுமி தேசிய கொடியை ஏற்றினார். ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
*லாடனேந்தல் வேலம்மாள் உறைவிடப்பள்ளியில் முதல்வர் கன்வர் தீபக் சிங் தேசிய கொடியை ஏற்றினார். நிர்வாக அலுவலர் சிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
*திருப்புவனம் தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கத்தில் துணை தலைவர் ஜெயராமன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தலைவர் விஜயகுமார், செயலாளர் கண்ணன், பொருளாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருப்புத்துார்
* திருப்புத்தூர் லிம்ரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தலைவர் சிக்கந்தர் பாதுஷா தலைமை வகித்தார். பொருளாளர் அப்துல் அஜீஸ், துணைத் தலைவர் சையது இப்ராஹிம், துணைச் செயலாளர் ஜாகிர் உசேன், நிர்வாக அலுவலர் சக்கரை முகம்மது முன்னிலை வைத்தனர். செயலாளர் காஜா முஹையதீன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் பெரியார் பங்கேற்றார். பெரிய பள்ளிவாசல் தலைவர் முகமது இஸ்மாயில் கொடி ஏற்றினார். முதல்வர் ஜாஸ்மின் நன்றி கூறினார்.
* திருப்புத்துார் தமிழ்நாடு கபடி அசோசியேசன் மாநில நிர்வாக அலுவலகத்தில் மாநில பொதுச்செயலாளர் மனோகரன் கொடியேற்றினார். மாநில துணைத் தலைவர் கண்ணன், பொருளாளர் முத்துக்குமார், மாவட்ட செயலாளர் அழகு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* திருப்புத்துார் அருகே அல் -அமீர் கல்வியியல் கல்லுாரியில் தாளாளர் சுலைமான் பாதுஷா கொடியேற்றினார். துணை முதல்வர் இமாம் வரவேற்றார். மாணவர்களுக்கு பேச்சுப், கவிதை போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேராசிரியர் கணேசன் நன்றி கூறினார்.
*ஆலம்பட்டு கிராமத்தில் மது, புகை ஒழிப்பு, மரம் வளர்ப்பை வலியுறுத்தி மூன்றாமாண்டு விழிப்புணர்வு குறுந்தொலைவு மாரத்தான் ஓட்டம் நடந்தது. வெற்றி பெற்றவர்கள், பங்கேற்றவர்கள் பரிசு,சான்றிதழ் வழங்கப்பட்டன. ஆலம்பட்டு இளைஞர்கள், கிராமத்தினர், மாரத்தான் நண்பர்கள் ஒருங்கிணைத்தனர்.
* திருப்புத்துார் பி.எஸ்.ஆர். கிரீன் பார்க் சர்வதேசப் பள்ளியில் தாளாளர் சுலைமான் பாதுஷா முன்னிலையில் மனவளக் கலை மன்ற தலைவர் சுகுமார் கொடியேற்றினார்.
ஒருங்கிணைப்பாளர் சுகன்யா வரவேற்றார். முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார். மனவளக்கலை அறக்கட்டளை நிர்வாகிகள் சுப்பையா, சுப்பிரமணி பேசினர்.
* காளையார்கோவில் அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியை ஜோஸ்பின் லதா தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் தலைவர் மோசஸ் கொடியேற்றினார். சாரண ஆசிரியர் நாகராஜன் உதவியுடன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் சகாய நிர்மலா ராணி, பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், என்.எஸ்.எஸ்., அலுவலர் உதயகுமார் உட்பட ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.
* சிவகங்கை அருகே மேட்டுப்பட்டி சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில், டாக்டர் சிக்கந்தர் சுல்தான் கொடியேற்றினார். கவுன்சிலர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் முருகன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சன்சாத் பேகம் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
அமராவதிப்புதுார் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் கமாண்டன்ட் சங்கர் குமார் ஜா கொடியேற்றினார். துணை கமாண்டன்ட் விகாஸ், மோகன் நாகரா கலந்து கொண்டனர். படை பிரிவின் அணிவகுப்பும் பயிற்சி பெற்ற அதிரடிப்படை சாகச நிகழ்ச்சியும் நடந்தது.
அமராவதிபுதுார் ராஜராஜன் கல்வி குழுமத்தில், அமராவதிபுதுார் சி.ஐ.எஸ்.எப் மூத்த கமாண்டன்ட் சங்கர் குமார் ஜா கொடியேற்றினார். துணை தளபதிகள் விகாஸ் குமார், மோகன் கலந்து கொண்டனர். அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பையா தலைமையேற்றார்.
செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சேர்மன் குமரேசன் கொடியேற்றினார். பள்ளி முதல்வர் உஷா குமாரி வரவேற்றார். துணை முதல்வர் பிரேம சித்ரா நன்றி கூறினார்.
கார்த்திகேயன் அரசு உதவி பெறும் பள்ளியில் தாளாளர் சுவேதா கொடியேற்றினார்.