ADDED : ஜூலை 01, 2024 10:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:
இந்திய கம்யூ., சிவகங்கை நகர் குழு மற்றும் தொழிற்சங்க கூட்டுக் குழு கூட்டம் இந்திய கம்யூ.மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
முருகன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் வழக்கறிஞர் மருது, மாவட்ட குழு உறுப்பினர் கங்கை சேகரன், நகர துணை செயலாளர் சகாயம், பாண்டி, மாதர் சங்க பொறுப்பாளர்கள் குஞ்சரம், ஈஸ்வரி கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருவாரூர் காரைக்குடி ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும். சிவகங்கை நகராட்சியில் குப்பை கொட்ட தனியாக இடம் ஒதுக்க வேண்டும். சிவகங்கை மருத்துவ கல்லுாரியில் உடனடியாக எக்கோ மற்றும் இசிஜி பரிசோதனை செய்யக்கூடிய டாக்டர்களை பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஏற்றப்பட்டது.