ADDED : மார் 07, 2025 08:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:' இந்திய கம்யூ.,சிவகங்கை மாவட்ட குழு கூட்டம் நடந்தது.
மானாமதுரை ஒன்றிய செயலாளர் சங்கையா தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் சாத்தையா, மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் மருது, விவசாய சங்க மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட பொருளாளர் மணவாளன் கலந்து கொண்டனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து விதமான உயிர் காக்கும் சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பகல் நேரத்தில் பொதுமக்கள் சென்னை செல்வதற்கு ஏதுவாக மானாமதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் வசதி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.