/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லுாரி மாணவர்களுக்கு கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி
/
கல்லுாரி மாணவர்களுக்கு கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி
கல்லுாரி மாணவர்களுக்கு கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி
கல்லுாரி மாணவர்களுக்கு கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி
ADDED : பிப் 22, 2025 06:24 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லுாரி வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி நடந்தது. சிவகங்கை மாவட்ட அரசு அருங்காட்சியகம் சார்பில் கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி இக்கல்லுாரியில் நடந்தது.
வரலாற்றுத்துறை மாணவர்கள் கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி எடுத்தனர். முதல்வர் ஜெயக்குமார் துவக்கினார்.
பயிற்சியில் பாண்டியநாடு பண்பாட்டு ஆய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் ரா.உதயக்குமார் கல்வெட்டு படியெடுக்கும் முறையை விளக்கி பயிற்சி அளித்தார்.
மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி, வரலாறுத்துறை தலைவர் தனலெட்சுமி ஆகியோர் கல்வெட்டு எழுத்துக்களின் வடிவம், பெயர், கால வரையறை குறித்து விளக்கினர்.
பேராசிரியர்கள் வேல்முருகன், சஞ்சீவி, சிவச்சந்திரன் ஒருங்கிணைத்தனர்.