/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோடை உழவு மூலம் வெளியேறும் பூச்சி, புழுக்கள்
/
கோடை உழவு மூலம் வெளியேறும் பூச்சி, புழுக்கள்
ADDED : மே 24, 2024 02:28 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால், வயல்களை உழுது பண்படுத்த வேளாண்மை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த மழையை வைத்து கோடை உழவு செய்வதன் மூலம் மேலே உள்ள மண் கீழாகவும், கீழே உள்ள மண் மேலாக மாறுகிறது. இதனால் மண்ணில் சத்துக்கள் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது. மண்ணில் இறுக்கம் குறைந்து மழை நீர் எளிதில் ஊடுருவி நைட்ரஜன் சத்து இயற்கையாக மண்ணுக்கு கிடைக்கும். வேர்கள் வளர்வதுடன் சத்துக்கள் எளிதாக பயிருக்கு கிடைத்து நன்கு வளர்ச்சி பெறுகிறது.
வேர்களை தாக்கும் பூச்சி, பூச்சிகளின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டு புழுக்கள் ஆகியவை வெளியே கொண்டு வரப்பட்டு சூரிய ஒளி வெப்பம் காரணமாக கொல்லப்படுகின்றன. மண்ணில் இருந்து வெளியேறும் புழு, பூச்சிகள் பறவைகளுக்கு இரையாகிவிடும்.
அடுத்த சாகுபடிக்கு பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் இல்லாத நிலை ஏற்படும். மண்ணில் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். கோடை உழவினால் களை செடிகளும் மண்ணுடன் சேர்ந்து மக்கி, நிலத்தை காக்கிறது.