ADDED : ஜூலை 19, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருப்புத்துார் மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.இ., பள்ளியில் இன்டராக்ட் கிளப் நிகழ்ச்சி ரோட்டரி சங்க உறுப்பினர் ரவி தலைமையில் நடந்தது.
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் கருப்பையா என்ற கண்ணன் வரவேற்றார். ரோட்டரி சங்க உதவி ஆளுநர் லெட்சுமணன், பள்ளி தாளாளர் டாக்டர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் பேசினர். பள்ளி மாணவர் தலைவராக ஜேன் ப்ரீத்தி ஜெயபாரதன், மாணவர் செயலாளராக திவ்யதர்ஷினி, பொருளாளராக பயாஸ் நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
ஜேன் ப்ரீத்தி ஜெயபாரதன் ஏற்புரை ஆற்றி, இந்த ஆண்டிற்கான வரவிருக்கும் நிகழ்ச்சிகளை அறிவித்து, தனது குழு உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார். கல்வி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கல்பனா தேவி நன்றி கூறினார்.