ADDED : மே 08, 2026 11:23 PM
தேவகோட்டை, மே 9 -
தேவகோட்டையில் வெயில் வதைத்த நிலையில் கடந்த வாரம் பயங்கர இடி மின்னலுடன் கோடை மழை கொட்டி தீர்த்தது. இருதினங்களுக்கு முன்பு லேசான மழை பெய்தது. தற்போது இரண்டு நாட்களாக பகலில் வெயில் அதிகமாக இருந்தாலும் மதியத்திற்கு மேல் கோடை மழை கொட்டியது. நேற்று மதியம் மின்னல் இடியுடன் கனமழை கொட்டியது. இரவிலும் இந்த மழை தொடர்கிறது. தொடர்ந்து மழை பெய்ததால் அக்னி நட்சத்திரத்தின் வெப்ப நிலை குறைவாகவே உள்ளது. தொடர் மழை காரணமாக கிராமப் புறங்களில் சாகுபடி செய்துள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தாண்டு விவசாயத்திற்கு வசதியாக இந்த மழையால் ஆரம்பகட்ட பணிகளை பார்க்க துவங்கி உள்ளனர்.
கனமழை காரணமாக தேவகோட்டை நகர் முழுவதும் தண்ணீர் ஓடியது. தியாகிகள் ரோடு, திருப்புத்தூர் ரோடு , மற்றும் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக ரோட்டில் தண்ணீர் சாக்கடையுடன் ஓடியது.
