/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுமிக்கு தொல்லை கொடுத்த முதியவருக்கு சிறை தண்டனை
/
சிறுமிக்கு தொல்லை கொடுத்த முதியவருக்கு சிறை தண்டனை
சிறுமிக்கு தொல்லை கொடுத்த முதியவருக்கு சிறை தண்டனை
சிறுமிக்கு தொல்லை கொடுத்த முதியவருக்கு சிறை தண்டனை
ADDED : டிச 07, 2024 03:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே அரண்மனை சிறுவயலைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 78. சமையல் மாஸ்டராக இருந்தார்.
கடந்த, 2018 மே 20 காலை 11:00 மணிக்கு, அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார்.
தேவகோட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
சிவகங்கை போக்சோ நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன் வழக்கை விசாரித்து, ராஜேந்திரனுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.