ADDED : மே 31, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : காளையார்கோவில் அருகே காஞ்சிபட்டி கிராமத்தில் தர்ம முனீஸ்வரர் ஜலகண்டா அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. காளைகள்முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர்.
முதலில் கிராம கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 500 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
120 மாடுபிடி வீரர்கள் குழு வாரியாக களமிறக்கப்பட்டனர். பெரும்பாலான காளைகள்மாடுபிடி வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் களத்தில் நின்று விளையாடின. போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
காளைகள் முட்டியதில் 20 பேர் காயம்அடைந்தனர்.