/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கட்டிக்குளத்தில் மே 22ல் ஜல்லிக்கட்டு
/
கட்டிக்குளத்தில் மே 22ல் ஜல்லிக்கட்டு
ADDED : மே 16, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளத்தில் மே 22ம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடக்கிறது.
கட்டிக்குளம் திருவேட்டை அய்யனார் கோயிலில் வருடந்தோறும்நடைபெறும் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கோயில் முன் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.
இதில் மதுரை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 600க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு மாடுகளும்,100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.