/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளையார்கோவில் அருகே கோயிலில் நகை திருட்டு
/
காளையார்கோவில் அருகே கோயிலில் நகை திருட்டு
ADDED : செப் 01, 2024 06:09 AM
சிவகங்கை : காளையார்கோவில் அருகே உசிலங்குளம் பொக்கிஷகோட்டையில் காளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அ.கருங்குளத்தை சேர்ந்த சுவாமிநாதன் 68 பூஜை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சுவாமிநாதன் பூஜையை முடித்து கோயிலை பூட்டி சென்றார். நேற்று காலை 7:00 மணிக்கு கோயிலை திறக்க வந்தார். கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அம்மன் கழுத்தில் இருந்த தங்க செயின் 12 பவுன், கோயில் உண்டியல் திருடு போயிருந்தது. சுவாமிநாதன் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார்.
எஸ்.ஐ.,க்கள் கார்த்திக்,குகன் விசாரித்தனர். உண்டியலில் பணம் திருடப்பட்டு அருகில் உள்ள கண்மாயில் உண்டியல் வீசப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதேபோல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் காளையார்கோவில் பகுதியில் சர்ச்களிலும், கோயில்களிலும் தொடர் கொள்ளை சம்பவம் நடந்தது.
கடந்த மாதம் நெடுவத்தாவு கிராமத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் டூவீலரில் வந்த நபர்கள் நகை பறித்து சென்றனர்.மறவமங்கலத்தில் டாஸ்மாக் ஊழியரிடம் கண்ணில் மிளகாய் பொடிதுாவி ரூ.2.67 லட்சத்தை பறித்து சென்றனர். களையார்கோவில் பகுதியில் கொள்ளை, வழிப்பறி என்பது தொடர் கதையாக உள்ளது.
காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில்போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். மறவமங்கலத்தில் புதிதாக போலீஸ் ஸ்டேஷன் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இரவு நேர ரோந்து பணிகளை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.