ADDED : ஜூன் 24, 2024 11:52 PM

காரைக்குடி : காரைக்குடியில் கண்ணதாசனின் 98வது பிறந்தநாள் விழா செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
கண்ணதாசன் மண்டபத்தில் உள்ள கண்ணதாசன் சிலைக்கு கோட்டாட்சியர்பால்துரை அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கண்ணதாசனின் மகள் விசாலாட்சி மற்றும் அரசு அலுவலர்கள்பொதுமக்கள் உட்பட பல்வேறு கட்சியினரும்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காரைக்குடி துணை சேர்மன் குணசேகரன், நகர் நல அலுவலர் திவ்யா, தாசில்தார் தங்கமணி, டாக்டர்.சுரேந்திரன், கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் நாகப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கீழச்சிவல்பட்டி: சிறுகூடல்பட்டி மலையரசி அம்மன் கோயில் அருகில் உள்ள கண்ணதாசன் சிலைக்கு கவிஞர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் வாசகர் வட்டம், திருப்புத்துார் எழுத்தாளர் கூட்டமைப்பு,பாரதி இலக்கிய பேரவை சார்பில் நிகழ்ச்சி நடந்தது.
தலைவர் ஜெயசந்திரன்தலைமை வகித்தார். பிறந்தநாள் மலரை முன்னாள் அமைச்சர் தென்னவன் வெளியிட்டார். சேது பாஸ்கரா கல்வி குழும நிறுவனர் கவிஞர் சேதுகுமணன் மலரை பெற்றுக் கொண்டார். பங்கேற்ற 50 கவிஞர்களுக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு விருது பெற்ற புலவர் மெய்யாண்டவர், ராமச்சந்திரன், சித்தார்த் பாண்டியன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சங்கர், சிவகங்கை தமிழ்சங்க நிறுவனர் ஜவகர், அப்பச்சி சபாபதி, காந்தி வாழ்த்த்தினர். சித்தார்த் பாண்டியன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. கிராமத்தினர் வைரவன், மோகன், அலங்கி முத்துக்குமார், சிங்காரம், நாராயணன், ஆண்டியப்பன் பங்கேற்றனர்.