/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்ணுடையநாயகி கோயில் வைகாசி திருவிழா; மே 14 கொடியேற்றம்; 22ல் தேரோட்டம்
/
கண்ணுடையநாயகி கோயில் வைகாசி திருவிழா; மே 14 கொடியேற்றம்; 22ல் தேரோட்டம்
கண்ணுடையநாயகி கோயில் வைகாசி திருவிழா; மே 14 கொடியேற்றம்; 22ல் தேரோட்டம்
கண்ணுடையநாயகி கோயில் வைகாசி திருவிழா; மே 14 கொடியேற்றம்; 22ல் தேரோட்டம்
ADDED : மே 01, 2024 07:54 AM
சிவகங்கை, : நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா மே 14 அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 13 அன்று மாலை 5:15 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது.
மே 14 அன்று காலை 10:35 முதல் 11:25 மணிக்குள் கொடியேற்றி வைகாசி திருவிழா துவங்குகிறது. அன்று மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல், இரவு 7:00 மணிக்கு வெள்ளி கேடகத்தில் அம்மன் புறப்பாடு நடக்கிறது.
விழாவை முன்னிட்டு தினமும் காலை அம்மன் வெள்ளி கேடகத்திலும், இரவு 7:00 மணிக்கு சிம்மம், காமதேனு, யானை, பூத, வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். மே 20 அன்று காலை 9:00 மணிக்கு பல்லக்கில் சயன அலங்காரத்தில் அம்மன் காட்சி அளிக்கிறார்.
மாலை 6:00 மணிக்கு தங்க ரத உள்பிரகார புறப்பாடு நடைபெறும். இரவு 7:00 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடக்கும். மே 21 அன்று காலை 8:10 மணிக்கு களியாட்ட கண்ணாத்தாளுக்கு காப்பு கட்டப்படும்.
இரவு 7:00 மணிக்கு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடு நடக்கும்.
மே 22 அன்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் திருவீதி உலா நடைபெறும்.
இரவு புஷ்ப பல்லக்கு, மே 23 காலை 8:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்தி செலுத்துவர்.
அன்று இரவு 7:00 மணிக்கு வெள்ளி குதிரை வாகன புறப்பாடு, 9:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் கண்ணுடைய நாயகி எழுந்தருள்வார்.
மே 24 அன்று காலை உற்ஸவ சாந்தி, மதியம் அன்னதானம், மாலை வெள்ளி ஊஞ்சல் உற்ஸவத்துடன் வைகாசி திருவிழா நிறைவு பெறும்.
விழா ஏற்பாட்டை தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில், கோயில் கண்காணிப்பாளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முருகப்பன் உட்பட விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.