/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி - மதுரை ஏ.சி., பஸ் பழுது கொளுத்தும் வெயிலால் பயணிகள் அவதி

ADDED : மே 05, 2024 04:39 AM
காரைக்குடி, காரைக்குடியில் இருந்து மதுரைக்கு செல்லும் ஒரே ஏ.சி., பஸ்சிலுள்ள ஏ.சி.,யும் பழுதானதால்பயணிகள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடியிலிருந்து மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூர், திருச்சி, ராமேஸ்வரம், ஈரோடு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
காரைக்குடியில் இருந்து மதுரைக்கு ஒரே ஒரு ஏ.சி., பஸ் சென்று வருகிறது. காலை 6:00 மணி காலை 11:25 மற்றும் மாலை 4:40 ஆகிய மூன்று நேரங்களில் மட்டும் இயக்கப்படுகிறது.
காரைக்குடியிலிருந்து மதுரைக்கு 1 டூ 1 பஸ்கள்இயக்க பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை இயக்கப்படவில்லை. ஆனால் ஒன் டூ த்ரி பஸ்களே இயக்கப்படுகிறது. தற்போது வெயில் வாட்டி வதைத்து வரும்நிலையில் பயணிகள் பலரும் ஏ.சி., பஸ்சில் செல்ல விரும்புகின்றனர். ஆனால் மதுரைக்கு சென்று வந்த ஒரே ஏ.சி., பஸ்சும் கடந்த இரண்டு நாட்களாக ஏ.சி., பழுதானநிலையில் உள்ளது.
பஸ்சில் ஜன்னல்களும் இல்லாத நிலையால் பயணிகள் வெயிலின் வெப்பம் தாங்கமுடியாமல்திணறி வருகின்றனர். பழுதாகியுள்ள ஏ.சி., யை சரி செய்து பஸ்சை முறையாக பராமரித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.